கேரளாவில் 312 மது பார்கள் மூடல்: அரசு உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு

By செய்திப்பிரிவு

கேரளாவில் 312 மது பார்கள் மூடல் அரசு உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு திருவனந்தபுரம் கேரள அரசு உத்தரவுப் படி அந்த மாநிலம் முழுவதும் 312 மது பார்கள் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் மூடப்பட்டன.

இதை எதிர்த்து மது பார்களின் உரிமையாளர்கள் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கேரளாவில் அடுத்த 10 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு குறைவான ஓட்டல்களில் செயல்படும் மதுபார்களை மூட அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இதன்படி ஏற்கனவே மூடப்பட்ட 418 மது பார்களை மீண்டும் திறக்க உரிமம் வழங்கப்படாது என்று முதல்வர் உம்மன் சாண்டி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எஞ்சியுள்ள 312 பார்களும் மூடப்பட வேண்டும் என்று அவர் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார்.

அரசின் முடிவால் கேரளாவில் இனிமேல் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மதுபார்கள் செயல்படும். இதர 700 ஓட்டல்களில் மது பார்கள் நிரந்தரமாக மூடப்படுகின்றன. உயர் நீதிமன்றத்தில் வழக்கு இதுதொடர்பாக சுமார் 600 ஓட்டல் உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் மது பார்களை மூடும் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி கேரள அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி பார் உரிமையாளர்கள் தரப்பில் மாநில உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி சி.டி. ரவிகுமார் தெரிவித்தார். போலீஸார் தீவிர கண்காணிப்பு அரசு உத்தரவை மீறி மது பார்களை திறக்கும் ஓட்டல் நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே அரசின் புதிய மது கொள்கையை தீவிரமாக அமல்படுத்த போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கேரளா முழுவதும் மது பார்கள் மூடப்படுவதால் 25,000 பேர் வேலையிழப்பார்கள் என்றும் ரூ.10,000 கோடி இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து முதல்வர் உம்மன் சாண்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேலையிழக்கும் தொழிலாளர்களின் மறுவாழ் வுக்காக சிறப்பு நிதியம் ஏற்படுத் தப்படும் என்றும் பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட பல்வேறு பசுமைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்