அமேதி, ரேபரேலியில் வேட்பாளர்கள் யார்?- இன்று மாலை அறிவிக்கிறது காங்கிரஸ்

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை இன்று (சனிக்கிழமை) மாலை அக்கட்சி அறிவிக்கிறது. இதனால், இந்தத் தொகுதிகளில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ராகுல், பிரியங்கா காந்தியே வேட்பாளர்கள் அவர்கள் வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்வார்கள் என்ற ஊக அடிப்படையிலான செய்திகளும் உலாவரத் தொடங்கிவிட்டன.

மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு இன்று மாலை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. காங்கிரஸ் கட்சி இதுவரை 317 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், உ.பி.,யின் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் வேட்பாளர்களை இறுதி செய்ய இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அமேதியில் போட்டி பற்றிய அத்தனை கேள்விகளுக்கும் இதுவரை ராகுல் காந்தி ‘கட்சி மேலிட முடிவுக்குக் கட்டுப்படுவேன்’ என்று மட்டுமே பதில் கூறியுள்ளார். இதனால் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தின் அறிவிப்பு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஆஸ்தான தொகுதிகள்: உத்தரப் பிரதேசத்தில் காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி. அமேதியில் கடந்த 1967 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது.

1980ல் சஞ்சய் காந்தி மூலமாக அமேதி காங்கிரஸ் தலைமையின் குடும்பத் தொகுதியாக மாறியது. அதே வருடம் சஞ்சய் காந்திக்கு பின் அங்கு வந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி தொடர்ந்து 1984, 1989, 1991 வரை எம்பியாக இருந்தார். அவரது மறைவால் வந்த இடைத்தேர்தலில் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான கேப்டன் சதீஷ் சர்மா போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.

இதற்கு அடுத்து வந்த 1996 பொதுத் தேர்தலிலும் சர்மா, அமேதி எம்பியானார். பிறகு 1998ல் பாஜகவின் சஞ்சய் சிங் கைக்கு அமேதி மாறியது.

அமேதி களத்தில் 1999ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியால், மீண்டும் அது காங்கிரஸ் வசமானது. இவர், அடுத்த தேர்தலில் அருகிலுள்ள ரேபரேலிக்கு மாறிவிட, அமேதியில் ராகுல் 2004ல் முதன்முறையாக களம் இறங்கினார்.

அடுத்து வந்த 2009, 2014, 2019 மக்களவை தேர்தலிலும் என அமேதியில் மூன்று முறை தொடர்ந்தார் ராகுல். இதில், 2014 முதல் பாஜவுக்காக ராகுலை எதிர்த்த மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, 2019ல் ராகுலை தோற்கடித்தார்.

கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால் அங்கு வெற்றி பெற்றதை அடுத்து அவர் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார். ரேபரேலியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். தற்போது அவரும் மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டார்.

சமாஜ்வாதியுடன் கூட்டணி பலன் தருமா? இந்நிலையில் அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் தான் இன்று மாலை அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள். அமேதியில் மீண்டும் ராகுல் போட்டியிடலாம் என்றே பரவலாகக் கூறப்படுகிறது. பிரியங்கா காந்தி ரேபரேலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அது அவரது தேர்தல் அரசியல் கணக்கை துவக்குவதாக அமையும்.

இம்முறை காங்கிரஸ் கட்சி, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் அதற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

46 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்