நியூஜெர்சி: அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன், மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர்.
சொந்த மண்ணில் பாலஸ்தீனிய அரேபியர்கள் அகதிகளாக வாழும்நிலைக்கு இஸ்ரேல் யூதர்களால் ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை வலுவாக முன்வைத்து அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக இஸ்ரேல் ராணுவம் காசா யுத்தத்தில் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவிப்பதைக் கண்டித்து நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலை மாணவர்கள் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது.
இதன் தொடர்ச்சியாக தற்போது பிரின்ஸ்டன் பல்கலையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரின்ஸ்டன் பல்கலை மாணவர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி: பிரின்ஸ்டன் பல்கலை வளாகத்தின் முற்றத்தில் மாணவி அசிந்தியா சிவலிங்கன், மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் கூடாரமிட்டுக் கடந்த சில நாட்களாக பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வந்தனர். பின்னர் பல்கலையின் பிற மாணவர்கள், சில பேராசிரியர்கள், வெளிநபர்கள் உட்பட பலர் அவர்களுடன் இணைந்து பாலஸ்தீனை ஆதரித்தும், இஸ்ரேலை எதிர்த்தும் கோஷமிட்டனர்.
» ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலியின் அழைப்பை ஏற்றார் பிரதமர் மோடி
» ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு
மேற்கொண்டு கூட்டங்கள் நடத்த அவர்கள் திட்டமிட்டு வந்தனர். இதனிடையில், கடந்த புதன்கிழமை அன்று பல்கலை வளாகத்தில் இவ்வாறு கூடாரம் இடுவது விதிமுறை மீறலென நிர்வாகம் எச்சரித்து மின்னஞ்சல் அனுப்பியது. இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அசிந்தியா சிவலிங்கன், ஹாசன் சையத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அசிந்தியா சிவலிங்கன், ஹாசன் சையத் ஆகியஇருவரும் பல்கலையின் விடுதியில் தங்க தடை விதிக்கப்பட்டி ருப்பதாகப் பல்கலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் பல்கலையைவிட்டு வெளியேற்றப் படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டமாணவி அசிந்தியா சிவலிங்கன் பிரின்ஸ்டன் பல்கலையில் சர்வதேச வளர்ச்சிக்கான பொது விவகாரத் துறையில் முதுநிலைப் பட்டம் படித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago