வடக்கு காஷ்மீரின் குவாரெஸ் பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் முஸாபர் அகமட் கான் எழுதிக் கொண்டிருக்கும் போது எழுதப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் மாயப்பேனாவை கண்டுபிடித்துள்ளார்.
பேனாவின் பின்புறத்தில் இணைக்கப்பட்ட கேசிங் மூலம் சிறிய எல்.சி.டி மானிட்டரில் எழுதப்படும் வார்த்தைகள் எவ்வளவு என்பதையும் காட்டிவிடும் என்கிறார் இந்த 3வது படிக்கும் அதிசய மாணவர் முஸாபர் அகமட்.
மேலும் மொபைல் போனிலும் மெசேஜ் மூலம் எழுதப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை வந்து சேருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
“என்னுடைய கடைசி பரிட்சையில் குறைவாக எழுதியதால் என் மார்க்குகள் குறைந்தன. அது எனக்கு மிகவும் சோகமாகவே இருந்தது. அப்போதுதான் வார்த்தைகளின் கணக்கை எழுதும்போதே காட்டும் பேனா என்ற கருத்து என் மூளையில் உதித்தது” என்று ஏ.என்.ஐயிடம் கூறியுள்ளார் முஸாபர்.
ராஷ்ட்ரபதி பவனில் விழா ஒன்றில் இந்தப் பேனா காட்சிப்படுத்தப்பட்டது. இந்தப் புதிய அரிய கண்டுபிடிப்பை இந்த வயதில் மேற்கொண்ட சிறுவன் முஸாபருக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் புகழ் மழை பொழிந்தார்.
இந்தப் பேனா வணிக ரீதியாக சந்தையிலும் விற்கப்பட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அநேகமாக வரும் மே மாதம் இந்த மாயப்பேனா சந்தையில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிய கேள்விகளுக்கு விடை எழுதும் போது வார்த்தைகள் எண்ணிக்கையை காட்டும் போது அது மாணவர்களுக்கு பெரிய அளவில் உதவிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago