தலைநகரம் இல்லாத ஆந்திரா: ஓய்.எஸ்.ஷர்மிளா தாக்கு

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்எஸ். ஷர்மிளா விஜயவாடாவில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

மத்தியில் காங்கிரஸ் அரசு ஆட்சி அமைத்ததும், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கண்டிப்பாக வந்து விடும். போலவரம் அணைக்கட்டும் பணிகளும் நிறைவடையும். தலைநகர பணிகள் அனைத்து நிறைவு பெறும்.

குலம், மதம், ஜாதி, கட்சி பேதமின்றி அனைவருக்கும் நல திட்டபணிகள் சென்று சேரும். நாட்டிலேயே தலைநகரம் இல்லாத மாநிலமாக ஆந்திரா உள்ளது. வாஷிங்டன் போன்று சிறந்த தலைநகரை உருவாக்குவதாக முதல்வர் ஜெகன் வாக்குறுதி அளித்தார். அது என்னவானது ?

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் பல தொழிற்சாலைகள் காணாமல் போனது. ஆந்திராவில் வளர்ச்சி ஸ்தம்பித்து விட்டது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதால், வேலை இல்லா திண்டாட்டம் தலைதூக்கி உள்ளது. மாநில வளர்ச்சிக்காக பாடுபடுபவர்களுக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள். இவ்வாறு ஷர்மிளா பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE