புதுடெல்லி: இந்தியாவில் நம்பமுடியாத பணிகளைச் செய்துள்ளார் பிரதமர் மோடி என்று ஜே.பி. மோர்கன் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஜேமி டிமோன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜே.பி.மோர்கன் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ஜேமி டிமோன் கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சி நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு அங்கு சிறந்தத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துள்ளார். இந்தியாவில் நம்ப முடியாத அளவுக்குப் பணிகளை பிரதமர் மோடி செய்துள்ளார்.
இங்குள்ள பத்திரிகைகள் அவரை கடுமையாக விமர்சித்தன. ஆனால் அதைப் பற்றி அவர் பொருட்படுத்தாமல் இந்தியாவில் உள்ள 40 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டுள்ளார்.
மிகக் கடினமான பணிகளை அவர் செய்து முடித்துள்ளார். அங்கு 40 கோடி மக்கள் வீட்டில் கழிப்பறை இல்லாமல் இருந்தனர். தற்போது பிரதமர் மோடி அங்கு, பல முன்னோடித் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். அந்தநாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பிரதமர் மோடியை அங்கீகரித்துள்ளனர்.
70 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்குகளைத் தொடங்கிக் கொடுத்துள்ளார் மோடி. இதன் மூலம் பணப் பரிமாற்ற சேவை சிறந்த முறையில் நடைபெறுகிறது. அங்கு நம்ப முடியாத அளவுக்கு கல்வி முறை சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உயர்த்துகின்றனர். இதற்கு முக்கியக் காரணம் பிரதமர் மோடி. அவர் மிகவும் வலுவான மனிதர். இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago