புனே அருகே லாரி கவிழ்ந்து விபத்து: தொழிலாளர்கள் 18 பேர் பலி

By ஏஎஃப்பி

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே  நடந்த விபத்தில் வேலைக்காக சென்ற லாரியில் சென்ற தொழிலாளர்கள் 18 பேர் பலியாகினர்.

இதுகுறித்து  ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், கர்நாடக மாநிலம் விஜயபுராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் புனேயில் உள்ள தொழில் பேட்டையில் பணி புரிகின்றனர். வழக்கம்போல் இவர்கள், லாரியில் புனே நோக்கி சென்றனர்.

 மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் சென்றபோது, புனே - பெங்களூரு தேசிய சாலையிலுள்ள அவர்கள் சென்ற லாரி  இன்று (செவ்வாய்க்கிழமை) விபத்துக்குள்ளானது இதில் பயணம் செய்த 18 பேர் பலியாகினர்.  இந்த விபத்து அதிகாலை 5.30 மணியளவில் நடந்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

போலீஸார் தரப்பில், மொத்தம் அந்த லாரியில் 35 பேர் பயணம் செய்துள்ளனர். லாரி தனது கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம்” என்று கூறப்பட்டுள்ளது.

இப்பகுதியில்  சாலை விபத்துகள் ஏற்படுவதாக உள்ளூர் வாசிகள் போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்