கேஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைதான டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தெலங்கானா முன்னாள் முதல்வர் மகள் கவிதா ஆகியோரின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவை அமலாக்கத் துறை அதிகாரிகள் மார்ச் 15 ஆம் தேதி கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, இதே வழக்கில் முதல்வர் கேஜ்ரிவால் மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கேஜ்ரிவால்.

கவிதாவின் ஜாமீன் மனுவை மே 2-ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவிருக்கிறது. அதோடு, இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய கேஜ்ரிவாலின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. தற்போது, இருவரும் திஹார் சிறையில், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கேஜ்ரிவால் மற்றும் கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவரும் மே 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட இருக்கின்றனர்.

இதனிடையே, திஹார் சிறையில் உள்ள தனது கணவரைக் கொலை செய்ய சதி நடக்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் சில தினங்களுக்கு முன்பு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், இதை சிறை நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும் தனக்கு இன்சுலின் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் சிறை நிர்வாகம் அனுமதி மறுப்பதாக கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், கேஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து திஹார் சிறை நிர்வாகம் திங்கள்கிழமை டெல்லி துணை நிலை ஆளுநரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி, கேஜ்ரிவால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இன்சுலின் எடுத்துக்கொண்டார். சிறை அதிகாரிகளால் முதல்வருக்கு இன்சுலின் மறுக்கப்பட்டதாக கூறுவது தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்