திருமண பத்திரிகையில் பாஜக வேட்பாளர் புகைப்படம் @ தெலங்கானா

By என்.மகேஷ்குமார்


தெலங்கானா மாநிலத்தில் பாஜக தொண்டர் திருமண பத்திரிகையில் தனது தொகுதி பாஜக வேட்பாளர் புகைப்படத்தை அச்சிட்டு விநியோகம் செய் துள்ளார்.

தெலங்கானாவில் மே 13-ம் தேதி 17 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், மேதக் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக ரகுநந்தன் ராவ் களம் இறங்கி உள்ளார்.

இவரது ஆதரவாளர்களில் ஒருவரான சுரேஷ் நாயக்கின் தம்பியின் திருமணம் வரும் 28-ம்தேதி நடைபெற உள்ளது. இதற்கான திருமண பத்திரிகையில் பாஜக வேட்பாளர் ரகுநந்தனின் புகைப்படத்தை அச்சிட்டதோடு, அதன் கீழே ‘திருமண பரிசே உங்களின் ஓட்டு தான்’ என சுரேஷ் நாயக் அச்சிட்டுள்ளார்.

இது குறித்து சந்திரய்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காடிபல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்