‘‘இடஒதுக்கீடு இருந்ததால்தான் வெற்றி பெற்றேன்; பாஜகவால் அல்ல!’’ - பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு தலித் எம்.பி காட்டமான கடிதம்

By ஏஎன்ஐ

இடஒதுக்கீடு இருந்ததால்தான் எனது தொகுதியில் வெற்றி பெற்றேன்; பாஜகவால் வெற்றி பெறவில்லை, மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதையும் செய்யவில்லை, என பிரதமர் நரேந்திர மோடிக்கு மேலும் ஒரு தலித் சமூக எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கஞ்ச் தொகுதி எம்.பி.யான சோட்டே லால் கர்வார், தனது தொகுதியில் நடக்கும் ஊழல் விவகாரம் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திக்க சென்றபோது, கண்டபடி திட்டி வெளியேற்றினார் என பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதினார். மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் அவர் புகார் அளித்தார். உத்தரப் பிரதேசம் மட்டுமின்றி நாடுமுழுவதும் இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒரு தலித் சமூக எம்.பி மத்திய அரசு மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். நகினா தொகுதியைச் சேர்ந்த யஷ்வந்த் சிங், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

‘‘ஒரு தலித் சமூக எம்.பியாக எனது திறமைகளை கட்சி பயன்படுத்திக் கொள்ளவில்லை. இடதுஒதுக்கீடு காரணமாகவே நான் தற்போது எம்.பியாக உள்ளேன். பாஜகவால் எனது தொகுதியில் நான் வெற்றி பெறவில்லை. நாடுமுழுவதும் உள்ள 30 கோடி தலித் மக்களுக்கும் கடந்த 4 ஆண்டுகளில், மத்திய அரசு எதையும் செய்யவில்லை.

எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தலித் மக்களின் உரிமையை பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்