என்னை முதல்வர் பதவிக்காக பாஜக அணுகியது: ஆம் ஆத்மி குமார் விஸ்வாஸ் தகவலால் டெல்லி அரசியலில் சர்ச்சை

டெல்லி முதல்வர் பதவி அளிப்பதாக, பாஜக-வை சேர்ந்த முக்கிய பிரமுகர் தன்னை அணுகியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குமார் விஸ்வாஸ் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குமார் விஸ்வாஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, "பாஜக-வின் முக்கிய பிரமுகரும், எனது பழைய நண்பருமானவர் கடந்த ஏப்ரல் மாதம் எனது டெல்லி வீட்டிற்கு வந்தார். தேர்தலில் எனது கட்சி தோல்வி அடைந்ததற்காக ஆறுதல் கூற வந்தார் என்று நினைத்தேன்.

மாறாக, அக்கட்சியின் தலைமையில் என்னை டெல்லி முதல்வராக்க தயாராக இருப்பதாக கூறினார். அவர் பாஜக தலைமையின் அறிவுறுத்தலின் பேரிலே என்னை சந்திக்க வந்திருந்ததாகவும் கூறினார். அவரது சந்திப்பு குறித்து எனது கட்சியை சேர்ந்த நண்பர்களிடம் கூட நான் கூறினேன்" என்றார்.

மேலும், அவரது வலியுறுத்தலை தான் ஏற்கவில்லை என்றும், அதே போல பாஜக பிரமுகரின் பெயரையும் வெளியிட முடியாது என்றும் அந்த பேட்டியின்போது குமார் விஸ்வாஸ் தெரிவித்தார்.

பாஜக மறுப்பு:

குமார் விஸ்வாசின் இந்த குற்றச்சாட்டை பாஜக தரப்பு மறுத்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் டெல்லி மாநிலத் தலைவர் சதீஷ் உபாத்யாய கூறும்போது, "அவர் பாஜக-வில் இருந்திருந்தால், என்றோ டெல்லி முதல்வராகி இருக்கலாம். பாஜக-வை சேர்ந்தவர் குமார் விஸ்வாஸை சந்தித்தற்கு ஆதாரம் எங்கே? ஆதாரம் இருந்தால் கூறட்டும், பின்னர் இது குறித்து பேசலாம்.

ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கு, அரவிந்த் கேஜ்ரிவால் புதிய திரைக்கதை எழுதி தந்திருப்பார். முன் அக்கட்சியின் தலைவர் செய்ததை அப்படியே அதன் உறுப்பினர்களும் செய்கின்றனர்" என்றார்.

பாஜக பிரமுகர் யார்?

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி, பாஜக-வை சேர்ந்த அந்த முக்கிய பிரமுகரின் பெயரை குமார் விஸ்வாஸ் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அவர்களின் உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதனை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் முகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த குமார் விஸ்வாஸ், மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்