”மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகிவிட்டது” - வீடியோ பகிர்ந்து ராகுல் சாடல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “பிரதமர் மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வதே தண்டனையாகிவிட்டது” என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒரு வீடியோவைப் பகிர்ந்து விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்டனையாகிவிட்டது. ரயிலில் பொதுப்பெட்டிகளை குறைத்து, எலைட் ரயில்களை மட்டுமே ஊக்குவிக்கும் மோடி ஆட்சியில் அனைத்து தரப்பு பயணிகளும் துன்புறுத்தப்படுகிறார்கள். பணம் கொடுத்து டிக்கெட் பெற்றாலும் அவர்களால் இருக்கைகளில் அமர்ந்து செல்ல முடிவதில்லை.

சாமானிய மக்கள் தரையிலும், கழிவறையிலும் அமர்ந்து பயணம் செய்கின்றனர். ரயில்வே துறையை பலவீனப்படுத்தி அதை திறனற்றது என நிரூபித்து தனது நண்பர்களுக்கு விற்கப்பார்க்கிறது இந்த பாஜக அரசு. சாமானியர்களின் பயணத்தைக் காப்பாற்ற ரயில்வே துறையை அழிக்கும் மோடி அரசை அகற்ற வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE