“பாஜக 150-ஐ தாண்டாது; இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும்...” - ராகுல் காந்தி பேச்சு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: “பாஜகவினர் 150 இடங்களுக்கும் மேல் பெற மாட்டார்கள். மத்தியில் ஆட்சிக்கு இண்டியா கூட்டணி வந்தவுடன், அக்னிவீரர் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்” என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிஹாரின் பாகல்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பாஜகவினர் அதிகப்படியான இடங்களைப் பெறுவோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். ஆனால், நான் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். பாஜகவினர் 150 இடங்களுக்கு மேல் பெற மாட்டார்கள்.

இண்டியா கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அக்னிவீரர் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். இந்தியாவுக்கு இரண்டு வகையான தியாகிகள் தேவையில்லை, அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்வோம். ஜிஎஸ்டி முறையை மாற்றுவோம். ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்குவோம்

விவசாயிகளுக்கு இரண்டு உத்தரவாதங்களை அளிக்கிறோம். காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப் போகிறது. இரண்டாவதாக, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நாங்கள் வழங்கப் போகிறோம்” என்றார்.

முன்னதாக தனது எக்ஸ் தளத்தில், "ஊழலை கற்றுத்தரும் பள்ளியை பிரதமர் மோடி நடத்துகிறார், ரெய்டு மூலம் நன்கொடை வசூலிப்பது எப்படி, நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் விநியோகிப்பது எப்படி என்பது பற்றி பிரதமர் பாடம் நடத்துகிறார்" என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்