சென்னை: முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி என பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளது குறித்து விரிவாக பார்ப்போம்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உட்பட நாடு முழுவதும் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வமாக தங்களது வாக்குகளை செலுத்தி இருந்தனர்.
ஏழு கட்டங்களாக நடைபெறும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவின் தொடக்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் மக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உள்ளிட்டோர் வாக்கு செலுத்தினர். முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
“முதல்கட்ட தேர்தலில் வாக்காளர்கள் சிறந்த முறையில் தங்களது பங்களிப்பை வழங்கி இருந்தனர். இதில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் உள்ள மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெருவாரியான எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு குறித்து சிறந்த கருத்துகளை பெற முடிகிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
» வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வைத்ததால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் @ ராமநாதபுரம்
» ஜடேஜா 57, தோனி 28 - லக்னோவுக்கு எதிராக சிஎஸ்கே 176 ரன்கள் சேர்ப்பு
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago