புதுடெல்லி: இண்டியா கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சச்சின் பைலட், "இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி அணி பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். ராஜஸ்தானில் பாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும்.
நாடு முழுவதும் மாற்றத்துக்கான சூழல் உள்ளது. காங்கிரஸின் செயல்பாடு முன்பை விட சிறப்பாக இருக்கும் என்றும், ஜூன் 4-ஆம் தேதி இண்டியா கூட்டணி பெரும்பான்மை பெறும் என்றும் நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தின் கவுதம் புத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், "இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வரும் நாளில் அக்னி வீரர் திட்டத்தை ரத்து செய்வோம் என இளைஞர்களுக்கு கூற விரும்புகிறேன். இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது, மேற்கு உ.பி.யில் பாஜக முழுமையாக தோற்கும் என்று வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது போல் தெரிகிறது" என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago