ம.பி.யில் சலசலப்பு: காங்கிரஸின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பாஜக மேயர்!

By செய்திப்பிரிவு

சிந்த்வாரா: மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அந்நகரின் மேயர் விக்ரம் ஆகே காங்கிரஸ் வேட்பாளர் நகுல் நாத்துக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். விக்ரம் ஆகே காங்கிரஸிலிருந்து சமீபத்தில் விலகி பாஜகவில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக ஆகே வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில், "சமீபத்தில் நான் அரசியல் கட்சி ஒன்றில் (பாஜக) இணைந்த பின்பு அசவுகரியமாக உணர்கிறேன். சிந்த்வாராவில் வளர்ச்சியை உருவாக்கிய மனிதருக்கு நான் சரியானதைச் செய்யவில்லை என்று எண்ணுகிறேன். கல்வித் துறையாக இருந்தாலும், மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பதாகட்டும் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதாகட்டும் நகுல்நாத் சிந்த்வாரா தொகுதியின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர்.

எதிர்காலத்தில் அரசியலில் நிறைய செய்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது, என்றாலும் இன்று நான் எனது தலைவர் கமல்நாத் மற்றும் நகுல் நாத்துடன் நிற்கவில்லை என்றால், அவர்கள் எனக்கு நிறையச் செய்திருக்கிறார்கள். வாக்காளர்கள் கமல்நாத்துக்கு வாக்களித்து அவரை மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளர்களை நான் வேண்டிக்கொள்கிறேன்" என்று விக்ரம் ஆகே தெரிவித்துள்ளார்.

சிந்த்வாரா தொகுதி மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் கோட்டையாக கருதப்படுகிறது. இந்தத் தொகுதியில் அவர் ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளார். இங்கு நகுல் நாத்துக்கு எதிராக பாஜக விவேக் பண்டி சாஹு என்பவரை நிறுத்தியுள்ளது. அவரை ஆதரித்து பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் பிரச்சாரம் செய்திருந்தனர்.

சிந்த்வாரா மாநகரின் மேயரான விக்ரம் ஆகே, ஏப்ரல் 1-ம் தேதி மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் மற்றும் மாநில பாஜக தலைவர் விஷ்ணு தத் சர்மா தலைமையில் பாஜகவில் இணைந்திருந்தார்.

மத்திய பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதியில் சிந்த்வாரா உட்பட ஆறு மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலத்தில் உள்ள மொத்த மக்களைத் தேர்தலில் கடந்த 2019-ம் ஆண்டு சிந்த்வாராவில் மட்டும் பாஜக தோல்வி அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

48 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்