புவனேஸ்வர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் வரும் மே 13-ம் தேதி முதல் ஜூன் 1 வரை 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஆளும் பிஜு ஜனதா தள தலைவரும் மாநில முதல்வருமான நவீன் பட்நாயக், சட்டப்பேரவை தொகுதிகளுக்கான 5-வது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். 9 பேர் கொண்ட இந்த பட்டியலில் 6 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
இப்போது எம்எல்ஏ-வாக உள்ள 4 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வேறு கட்சியிலிருந்து வந்த 4 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 147 தொகுதிகள் உள்ள நிலையில் இதுவரை 126 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நவீன் பட்நாயக், வரும் தேர்தலில் பாரம்பரியமாக போட்டியிடும் ஹிஞ்சிலி (கஞ்சம் மாவட்டம்) மற்றும் போலாங்கிர் மாவட்டம் கந்தபஞ்சி என 2 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
» தேர்தலில் பாஜக 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கூட்டாக பேட்டி
» முன்னெப்போதும் இல்லாத அளவில் குறைந்த தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ்
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஹிஞ்சிலி மற்றும் பிஜப்பூர் (பர்கார் மாவட்டம்) ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும், பிஜப்பூர் தொகுதியில் ராஜினாமா செய்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago