புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான், திஹார் சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலை நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:
சிறையில் கடும் குற்றவாளி களுக்கு கிடைக்கும் வசதிகள் கூட டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு கொடுக்காதது வருத்தம் அளிக் கிறது. அவர் என்ன தவறு செய்தார்? நாட்டின் மிகப்பெரிய தீவிரவாதியை பிடித்தது போல் அவரை திஹார் சிறையில் நடத்துகின்றனர். பிரதமர் மோடிக்கு என்ன வேண்டும்?
வெளிப்படைத்தன்மை அரசியலை தொடங்கி பாஜகவின் அரசியலுக்கு முடிவு கட்டிய நேர்மையான முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவால் இப்படி நடத்தப்படு வது ஏன்? நாங்கள் அரசியலை பணியாக செய்கிறோம். நாங்கள் கேஜ்ரிவாலுடன் நிற்கிறோம்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் ஜூன் 4-ம் தேதி, ஆம் ஆத்மி மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவாகும். இவ்வாறு பகவந்த் மான் கூறினார்.
கண்ணாடித் தடுப்புக்கு பின்னால் நின்றவாறு தொலைபேசி இணைப்பு மூலம் இருவரும் 30 நிமிடங்கள் பேசியதாக திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago