இனி ஜெயலலிதா வழியை பின்பற்றப்போகிறேன்: கர்நாடக முதல்வர் சித்தராமய்யா பேட்டி

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வழியை பின்பற்றப்போவதாக க‌ர்நாடக முதல்வர் சித்தராமய்யா திங்கள்கிழமை பெங்களூரில் தெரிவித்தார்.

கர்நாடகாவில் நடைபெற்ற 3 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் சிக்கோடி,பெல்லாரி ஊரகம் ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

இதுகுறித்த தகவல் வெளி யானதும் கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

சிக்கோடி, பெல்லாரி ஊரகம் ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியா சத்தில் பாஜகவை வீழ்த்தியிருக் கிறது. மதச்சார்பின்மைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி யாக இதைக் கருதுகிறேன்.

கர்நாடகாவைப் பொறுத்த வரை பாஜகவின் செல்வாக்கு தகர்ந்துவிட்டது. எடியூரப்பா மீது மக்களிடையே நம்பிக்கை குறைந்திருப்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்துகிறது. அவருடைய சொந்தத் தொகுதி யான ஷிகாரிபுரா தொகுதியில் அவருடைய மகன் ராகவேந்திரா 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத் தில்தான் வெற்றி பெற்றிருக் கிறார். ஆனால் அதிக வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எடியூரப்பா எனக்கு சவால் விட்டிருந்தார்.

இனி ஜெ. வழி

தமிழக முதல்வர் ஜெயலலிதா வைப் போல இனி செய்தியாளர் களை சந்திப்பதை குறைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத் திருக்கிறேன். செய்தியாளர் களிடம் பேசுவதை நிறுத்திவிட்டு, ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுபடப் போகிறேன் என சித்தராமய்யா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 mins ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்