தன் மீது தவறை வைத்துக் கொண்டு உண்ணாவிரதம் மேற்கொண்ட பிரதமரை யாராவது பார்த்திருப்போமா? என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கிண்டலாக கேள்வியெழுப்பினார்.
ஆந்திரா தலைநகர் அமராவதியில் காவல்துறையினருக்கான தகவல் தொழில்நுட்ப மையத்தை (போலீஸ் டெக்னோ டவர்) முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டது. ஆந்திராவுக்கு மத்திய பாஜக அரசு செய்த துரோகம் தொடர்பாக மாநில மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததற்கு பின்னால் பெரிய அரசியல் உள்ளது.
இந்த விவகாரத்தில், பிரதமர் மோடியுடன் சமாதானமாகப் போகும் பேச்சுக்கே இடமில்லை. நாம் அனைவரும் இணைந்து பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும். இந்திய வரலாற்றில், தன் மீது தவறை வைத்துக் கொண்டு உண்ணாவிரதம் இருந்த பிரதமரை இதுவரை நாம் பார்த்திருப்போமா? நாடாளுமன்ற முடக்கத்துக்கு முழுமுதல் காரணமாக இருந்துவிட்டு, இப்போது உண்ணாவிரத நாடகமாடினால் மக்கள் அதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago