டெல்லி திஹார் சிறையில் கேஜ்ரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை சந்தித்துப் பேச பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேரம் கேட்டுள்ளார். இந்தநிலையில் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக போலீஸார் நேற்று ஆலோசனை நடத்தினர்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை எண் 2-ல் அடைக்கப்பட்டுள்ள அவரை சந்தித்துப் பேச திஹார் சிறை நிர்வாகத்திடம் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேரம் கேட்டுள்ளார்.

இந்த நிலையில், இவர்களது சந்திப்பின்போது வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திஹார் சிறை அதிகாரிகள், டெல்லி காவல் துறை மற்றும் பஞ்சாப் காவல் துறை அதிகாரிகள் இணைந்து சிறை டிஐஜி அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர்.

பகவந்த் மான் மற்றும் கேஜ்ரிவால் இடையேயான சந்திப்பைஏற்பாடு செய்வதற்காக டெல்லிசிறைச்சாலை விதிகளின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சம்பிரதாய விதிமுறைகளை மேற்கொள்வதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிறையில் தாம்சந்திக்க விரும்பும் பஞ்சாப் முதல்வர் உட்பட 6 பேரின் பெயர்களை கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE