இடைக்கால ஜாமீன் கோரி சிசோடியா மனு தாக்கல்: அமலாக்கத் துறை, சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில்சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் கைது செய்யப் பட்ட ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா இடைக் கால ஜாமீன் கோரி டெல்லிரோஸ் அவென்யூ நீதிமன் றத்தில் நேற்று மனு தாக்கல்செய்தார்.

டெல்லி மதுபான கொள்கையை மாற்றியமைத்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன, உரிமம் வைத்திருப்பவர்களுக்குத் தேவையற்ற சலுகைகள் நீட்டிக்கப் பட்டன, உரிம கட்டணம் சட்டவிரோதமாக விதிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் டெல்லிமுன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த 2023 பிப்ரவரி 26-ம் தேதிகைது செய்தது.

இதையொட்டி பிப்ர வரி 28 அன்று டெல்லி அமைச்சர வையிலிருந்து சிசோடியா ராஜினாமா செய்தார். மேலும், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை கடந்த 2023 மார்ச் 9 அன்று அவரை கைது செய்தது. இதையடுத்து, சிசோடியா திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், நெருங்கிவிட்ட மக்களவை தேர்தல் பிரசாரத்துக்காக இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா நேற்று மனு தாக்கல் செய்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வார்.

இதனிடையில், சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து தங்களது பதிலை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் தெரிவிக்கும்படி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE