தமிழகம் அமைதி காக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்

By எம்.சண்முகம்

காவிரி விவகாரத்தில் தமிழக மக் கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வேண்டு கோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி நதிநீர் விவகா ரம் மீண்டும் தமிழகத்தை கொந்தளிக்கச் செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக் காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதன் படி உண்ணாவிரதம், சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, மத்திய அரசு அலுவலகங்கள், சுங்கச் சாவடி கள் மீது தாக்குதல் என போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இன்று அனைத்துக் கட்சி சார்பில் முழுஅடைப்பு போராட் டமும் நடைபெற உள்ளது.

மத்திய அரசு ஆலோசனை

இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு அதிகாரிகள் இடையே கடந்த மார்ச் 5-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தீர்ப்பை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பக்ரா - பயஸ் நதிநீர் நிர்வாக வாரியம், கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா நதிநீர் நிர்வாக வாரியங்கள், பேத்வா நிர்வாக வாரியம் ஆகியவற்றின் செயல்பாடுகளை கணக்கிட்டு அதே போல காவிரி வாரியத்தையும் அமைக்கலாமா என்பது குறித் தும் விவாதிக்கப்பட்டது.

கர்நாடகா எதிர்ப்பு

இதையடுத்து, மத்திய நீர்வள அமைச்சகம் தலைமையில் நதிநீர் மேம்பாட்டுத்துறை மற்றும் கங்கை புனரமைப்புத் திட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் 4 மாநில அதிகாரிகளை அழைத்து ஆலோசித்தோம். இக்கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956-ன் கீழ் வாரி யம் அமைக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டது. இதில், தமிழகமும், புதுச்சேரியும் காவிரி மேலாண்மை வாரியத்தை நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இதற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை பொறியாளர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லாமல் மத்திய கேபினட் செயலர் தலைமையில், மாநில தலைமைச் செயலர்களைக் கொண்டு நிர்வகிக்க வேண்டும் என்ற ஆலோசனையை கேரளா தெரிவித்தது.

மாறுபட்ட கருத்து

நான்கு மாநிலங்களும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்திருப்பதால், மத்திய அரசு சட்டத் தின் கீழ் வாரியம் அமைக்க வேண்டுமா அல்லது நடுவர் மன்ற உத்தரவின் கீழ் அமைக்க வேண்டுமா என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும். இதற்கு 3 மாதம் அவகாசம்வேண்டும். இவ்வாறு அந்த மனு வில் மத்திய அரசு கூறியிருந்தது.

காவிரி வாரிய அமைப்பது தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கியுள்ள நிலையில், இந்தியாவில் இதுபோன்ற நதிநீர் தாவா விவகாரத்தில் நடைமுறையில் உள்ள முன் மாதிரி திட்டங்கள் விவரம் வருமாறு:

பக்ரா நதிநீர் நிர்வாக வாரியம்

மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ள பக்ரா நதிநீர் நிர்வாக வாரியம் 76-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் இயங்கும் சுயேச்சையான அமைப்பாகும். இந்த வாரியம் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், டெல்லி மற்றும் சண்டிகர் இடையே சட்லஜ், பயஸ், ரவி ஆற்று நீரை பகிர்ந்தளிக்கிறது. மின் திட்டங்கள், பாசனம், குடிநீர் தேவை ஆகிய அனைத்தையும் இந்த வாரியம் நிர்வகிக் கிறது.

கிருஷ்ணா நதிநீர் வாரியம்

கிருஷ்ணா நதிநீர் நடுவர் தீர்ப்பாயம் - 2 அளித்த தீர்ப்பின்படி, ஆந்திரா - 1005 டிஎம்சி, கர்நாடகா - 907 டிஎம்சி, மகாராஷ்டிரா - 666 டிஎம்சி என நதிநீர் பிரித்தளிக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின்பு ஆந்திராவுக்கு 512 டிஎம்சியும், தெலங்கானாவுக்கு 299 டிஎம்சியும் நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிகளை இந்த வாரியம் செய்து வருகிறது.

பேத்வா நதிநீர் வாரியம்

யமுனையின் கிளை நதியான பேத்வா நதிநீரை மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியை இந்த வாரியம் மேற்கொள்கிறது. ராஜ்காட், மடாடிலா, பரிஷ்லா, தவுருவர் ஆகிய அணைகளையும் வாரியம் நிர்வகிக்கிறது. இதேபோன்று நர்மதா, கோதாவரி, துங்கபத்ரா நதிநீர் பங்கீட்டுக்கும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வாரியங்கள் செயல் படுகின்றன.

இதே பாணியில், காவிரி நதிநீர் வாரியத்தை அமைக்கலாமா என்றுதான் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் யோசனையும் அதற் கான அவகாசத்தையும் கேட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் இந்த மனுவை வரும் 9-ம் தேதி விசாரிப்பதாக உறுதி அளித்துள்ளது.

அமைதி காக்க வேண்டுகோள்

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் தமிழக வழக்கறிஞர் உமாபதி நேற்று ஆஜரானார். அப்போதுகருத்து தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “காவிரி வழக்கை வரும் 9-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளோம். எனவே போராட்டம் நடத்தாமல் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும். காவிரி விவகாரத்தை நாங் கள் பார்த்துக் கொள்கிறோம். இந்தச் செய்தியை தமிழக மக்களுக்கு தெரிவியுங்கள்” என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்