பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேக நபர்கள் இருவர் கொல்கத்தாவில் கைது

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் உள்பட வழக்கில் தொடர்புடைய இருவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் குண்டுவைத்த நபர் மற்றும் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபர் என சந்தேகிக்கப்படும் இருவர், மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா அருகே இன்று (ஏப்ரல் 12) கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் அப்துல் மதீன் அகமது தாஹா (வயது 30), உணவகத்தில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்ததாக சந்தேகிக்கப்படும் முசாவிர் ஹுசைன் ஷாசிப் (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போலியான அடையாளத்துடன் மறைவான இடத்தில் தங்கி இருந்த நிலையில் இன்று அதிகாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புகள், மேற்கு வங்கம், தெலங்கானா, கர்நாடகா, கேரள மாநில காவல் துறை ஆகியோரின் துணையோடும், ஒத்துழைப்போடும் இவர்களை கைது செய்யும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகிய இருவரும் கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 2020-ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு ஏஜென்சிகளின் ரேடாரின் கீழ் உள்ளனர். இவர்கள், ‘தீர்த்தஹள்ளி பாதை’ எனக் குறிப்பிடப்படும் ஒரு பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு முகமைகள் நம்புகின்றன.

பெங்களூரில் உள்ள சுட்டகுண்டேபாளையத்தில் அல் ஹிந்த் அறக்கட்டளையை நடத்தி வந்த மெகபூப் பாஷாவும், தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீனும் இணைந்து, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை உருவாக்கி தென்னிந்தியாவில் மையங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ஐஎஸ் பாணி கிளர்ச்சியை தென்னிந்தியாவில் தொடங்க வேண்டும் என்பதே இவர்களின் திட்டம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவர்களோடு, அப்துல் மதீன் அகமது தாஹா, முசாவிர் ஹுசைன் ஷாசிப் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

2020 அக்டோபரில் மங்களூருவில் நடந்த பயங்கரவாத ஆதரவு கூட்டம், செப்டம்பர் 2022-இல் ஷிவ்மொகாவில் துங்கா நதிக்கரையில் நிகழ்ந்த ஐஇடி குண்டுவெடிப்பு மற்றும் குக்கர் குண்டுவெடிப்பு ஆகிய மூன்று பயங்கரவாத வழக்குகளிலும் தாஹா மற்றும் ஹுசைன் குற்றம்சாட்டப்பட்டனர்.

இது தொடர்பாக கர்நாடக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம், வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த பயங்கரவாத நெட்ஒர்க் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம். இருப்பினும், இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, ரத்னகிரி, நெல்லூர், ஹைதராபாத், சென்னை, அசாம், கொல்கத்தா என பல இடங்களுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் அதிக உந்துதல் உள்ளவர்கள். இவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிக நபர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கலாம். அது விசாரணையின் ஒரு பகுதியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்