காஷ்மீர் என்கவுன்ட்டரில் தீவிரவாதி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்:தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், ராஜ்போரா பகுதியில் உள்ள ப்ரெஸ்ஸிபோரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இவர் ஸ்ரீநகரை சேர்ந்த தானிஷ் ஷேக் எனவும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ‘தி ரெசிஸ்டன்ட் ஃப்ரன்ட்’ பிரிவைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டார்.

சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஜனவரி 5-ம் தேதி நடந்த என்கவுன்ட்டரில் லஷ்கர் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அதன் பிறகு 3 மாதங்களுக்குப் பிறகு நேற்று தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்