சந்தேஷ்காலி நில அபகரிப்பு, பாலியல் வழக்குகளை சிபிஐ விசாரிக்கும்: கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சந்தேஷ்காலி தீவுப் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ஷாஜகான். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சந்தேஷ்காலி சட்டப்பேரவைத் தொகுதி ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

இவர் தனது ஆதரவாளர் களுடன் இணைந்து ரேஷன் பொருட்கள் கடத்தல், நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அவர் மீது புகார் கொடுத்தாலும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் விவாதப் பொருளானது. இதையடுத்து தலைமறைவாக இருந்த ஷாஜகானை 55 நாட்களுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனிடையே, ஷாஜகான் மீதான வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், ஷாஜகான் மீதான புகாரில் 1% உண்மை இருந்தால்கூட அது வெட்கக்கேடானது என தெரிவித்திருந்தது. மேலும் உடனடியாக அவரை கைது செய்யாத மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

மிகச் சிக்கலானது: இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “சந்தேஷ்காலி விவகாரம் மிகவும் சிக்கலானது. இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே, ஷாஜகான் மீதான மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட புகார்கள் தொடர்பான வழக்குகளில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது. இந்த விசராணைக்கு மாநில அரசு முறையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும்” என்றனர்.

கடந்த ஜனவரி 5-ம் தேதி ஷேக்ஷாஜகான் மீதான புகார் தொடர்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். அவர்கள் மீது ஷாஜகான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்தும் மத்திய புலனாய்வு அமைப்பு ஏற்கெனவே விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்