திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணம் கடந்த சில ஆண்டுகளாக சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏற்கெனவே டெபாசிட் செய்து சமீபத்தில் முதிர்வடைந்த ரூ.4,000 கோடியில், ரூ.3,000 கோடி மட்டுமே அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது. மீதமுள்ள ரூ.1,000 கோடியை நிபந்தனைகளுக்கு மாறாக ஒரு தனியார் வங்கியில் டெபாசிட் செய்திருப்பதாக ராயலசீமா போராட்ட சமிதியின் தலைவர் நவீன் குமார் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, ஹைதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நவீன் குமார் ரெட்டி பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், “நிபந்தனைப்படி உண்டியல் பணத்தை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும்” என கூறியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி, மாநில இந்து அறநிலையத்துறை சிறப்பு செயலாளர், ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
37 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago