ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு குடி போதையில் பொறியியல் கல்லூரி மாணவர் கார் ஓட்டியதில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த தொழி லாளி இறந்தார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணி அளவில் வேகமாக வந்த கார், குஷாய் கூடா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை மீது ஏறியது. அங்கு தூங்கிக் கொண்டிருந்த அசோக் எனும் செருப்பு தைக்கும் தொழிலாளி மீது கார் ஏறி சென்றது. அங்கு ரோந்து பணியில் இருந்த போலீஸார் உடனடியாக சென்று அசோக்கை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து குஷாய் கூடா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஹைதராபாத் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஈசான்ய ரெட்டி, ஸ்ருஜனா, அம்ருதா, ஹாரிகா ஆகியோர் ஒரு விருந்துக்கு சென்று மது அருந்தி உள்ளனர். பின்னர் அனைவரும் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது காரை ஈசான்ய ரெட்டி ஓட்டி வந்துள்ளார். குஷாய் கூடா பகுதியில் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் ஏறி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில், ஹைதராபாத் மலக்பேட் இன்ஸ்பெக்டர் கங்கி ரெட்டியின் மகளும் காரில் குடிபோதையில் இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கங்கி ரெட்டிக் கும் தகவல் கொடுத்தனர். செருப்பு தைக்கும் தொழிலால் குடும்பத்தை காப்பாற்றி வந்த அசோக் இறந்ததை கண்டு அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரையும் கண் கலங்க செய்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago