அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

‘தி அசாம் டிரிபியூன்' என்ற நாளிதழுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. பாஜக ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் வடகிழக்கில் தீவிரவாதம் தலைதூக்கி இருந்தது. தற்போது வடகிழக்கு முழுவதும் அமைதி நிலவுகிறது.

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் யாருக்கும் சந்தேகம்எழத் தேவையில்லை. அந்த மாநிலத்தின் நலனில் மத்திய அரசுஅதிக அக்கறை செலுத்துகிறது.அண்மையில் அருணாச்சல பிரதேசத்தில் ரூ.55,000 கோடிமதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தேன்.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளேன். மணிப்பூர் பிரச்சினை உணர்வுபூர்வமானது. இதனை மிகவும் கவனமாக கையாள வேண்டும். அங்கு வன்முறைக்கு முடிவு கட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மியான்மரில் நிலவும் உள்நாட்டு குழப்பம் காரணமாக மேகாலயாவில் ஊடுருவல் தொடர்கிறது. இதை தடுக்கஇந்தியா, மியான்மர் இடையிலான தடையற்ற போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்துள்ளோம். மியான்மர் எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE