திருவனந்தபுரம்: கடந்த ஆண்டு மே மாதம் விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் அடசர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்த்ததாகச் சித்தரித்து இந்தப் படம் எடுக்கப்பட்டது. இதனால் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இருப்பினும், நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் இந்த படம் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வெளியானது. இந்நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கேரளா ஸ்டோரி படத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பியது. மதமோதலை ஏற்படுத்தும் கேரளா ஸ்டோரி படத்தை தேர்தல் நேரத்தில் அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் வெளியிட்டதற்கு கேரள அரசும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனிடையே இடுக்கி மறை மாவட்ட பேராயர் சார்பில் பள்ளி மாணவர்களுக்காக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த வாரம் (ஏப்ரல் 4) திரை யிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை இடுக்கி மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை பிரின்ஸ் காரக்காட் செய்திருந்தார். லவ்ஜிகாத்துக்கு எதிராக மாணவர்கள் விழிப்படைய வேண்டும் என்ற நோக்கில் படத்தை மாணவர்களுக்குத் திரையிட்டுக் காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
» ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்த்தது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு @ சத்தீஸ்கர்
» திருமணத்தின் போது கன்னியாதான சடங்கு செய்வது கட்டாயம் இல்லை: அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து
இடுக்கியிலுள்ள கேரள கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் இயங்கி வரும் பள்ளியைச் சேர்ந்த 10 முதல் 12-வது வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த ‘தி கேரளா ஸ்டோரி’ படம் காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரின்ஸ் காரக்காட் கூறும்போது, “காதல் என்றபெயரில் பெண்களை மாயவலையில் விழவைத்து தீவிரவாதம் உள்ளிட்ட தேசவிரோத நடவடிக்கையில் தீவிரவாதிகள் ஈடுபடுத்துகின்றனர். இதுதான் உண்மையில் நடக்கிறது.
பெண்களை தங்களது வலையில் சிக்கவைத்து அவர்களது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை நாங்கள் நேரடியாகப் பார்த்துள்ளோம். எனவே, அதுதொடர்பாக மக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த படத்தைத் திரையிட்டுக் காட்டினோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago