“2019 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் 9 சதவீதமாக இருந்தது. பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 1000-ஐ கடந்ததே இல்லை. கட்சிகள் பெண்களுக்கு சொற்ப வாய்ப்புகளையே கொடுத்தன” என சமூக ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் அதை அமல்படுத்துவதற்கான கால நிர்ணயம் ஏதும் செய்யப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர் இது அமலாகலாம் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலிலும் இந்த 33 சதவீத இடஒதுக்கீடு முழுவீச்சில் அமலாகவில்லை. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கி கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தக் கட்டுரை 1957-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் இருந்து கடந்த் 2019 தேர்தல் வரை தேர்தல் அரசியலில் பெண் வேட்பாளர்களிம் எண்ணிக்கை, வெற்றி விகிதம் வரை அலசி ஆராய்கிறது. இந்த புள்ளிவிவரத்தின் மீது நிபுணர்களும் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளனர். இது பற்றி தொகுப்பு பின்வருமாறு:
45 டூ 726! 1957-ல் நடந்த இரண்டாவது மக்களவைத் தேர்தலில் 45 பெண் வேட்பாளர்கள் களம் கண்டனர். அதுவே 2019 தேர்தலில் 726 பேர் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்தப் புள்ளிவிவரத்தின்படி 1957-ல் 4.5 சதவீதமாக இருந்த பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 2019-ல் 14.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேவேளையில் ஆண் வேட்பாளர்களின் எண்ணிக்க 1957-ல் 1474 ஆக இருந்தது இப்போது 2019-ல் 7322 ஆக அதிகரித்துள்ளது.
இதன் மூலம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 1957-ல் இருந்ததைவிட 5 மடங்கு அதிகரித்துள்ளது. பெண்களின் எண்ணிக்கை 16 மடங்குஅதிகரித்துள்ளது. 1957-ல் வெறும் 2.9 சதவீத பெண்களே தேர்தலில் போட்டியிட்டனர். 2019-ல் இது 9 சதவீதமாக அதிகரித்தது. இருப்பினும் இதுவரை பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை ஒருபோதும் 1000-ஐ கடக்கவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது. 1952 ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் பாலின விகித அடிப்படையிலான புள்ளிவிவரம் இல்லை.
1957-ல் நடந்த இரண்டாவது பொதுத் தேர்தல் புள்ளிவிவரத்தின்படி களத்தில் இருந்த 45 பெண் வேட்பாளர்களில் 22 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி விகிதம் 48.88 சதவீதம். ஆனால், 2019-ல் வெற்றி விகிதம் 10.74 சதவீதம் என்றளவில் குறைந்தது. 726 பெண் வேட்பாளர்களில் 78 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். ஆண் வேட்பாளர்களைப் பொருத்தவரை வெற்றி விகிதம் என்பது 1957ல் 31.7 சதவீதத்தில் இருந்து 2019ல் 6.4 சதவீதமாகக் குறைந்தது.
“தேர்தலில் ஆண், பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் தொடர்பான புள்ளிவிவரம் இதுவல்ல என்றாலும், இது நிச்சயமாக மக்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறாவிட்டாலும் போட்டியிடும் ஆண், பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை உணர்த்துகிறது. இது, இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. களத்தில் வேட்பாளர்கள் அதிகரிப்பதைக் காட்டுகிறது.” என்று அரசியல் சக்தி என்ற அமைப்பின் இணை நிறுவனர் தாரா கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
‘அரசியல் இலக்கு இல்லாமை’ - ஆண் - பெண் வேட்பாளர்கள் இடையே நிலவும் இந்த விரிந்த இடைவெளி பற்றி நிபுணர்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். “பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட மிகக் குறைந்த வாய்ப்பே அளிக்கப்படுகிறது. பெண் வேட்பாளர்களின் வெற்றி விகிதம் அதிகமாக இருந்தாலும் கூட அரசியல் கட்சிகள் மத்தியில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் விருப்பம் மிகமிகக் குறைவாகவே இருக்கிறது” என மகளிர் உரிமை செயற்பாட்டாளரான ரஞ்சனா குமாரி தெரிவித்திருக்கிறார்.
அப்படியே கொடுத்தாலும் கூட போட்டி அதிகமாக உள்ள தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கிவிடுகின்றனர். பண பலம், ஆள் பலம் கொண்ட ஆண் வேட்பாளர்களுக்கு எதிராக நிறுத்தப்படுகின்றனர். அரசியலில் ஆகையால் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதே தனது கணிப்பு என அவர் கூறுகிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago