அகமதாபாத்: குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் 300 பேர் படிக்கின்றனர். ரம்ஜானை முன்னிட்டு குஜராத் பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்கள் சிலர் தொழுகையில் ஈடுபட்டனர். இது ஒரு தரப்பினருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 16-ம் தேதி இரவு வெளிநபர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து தொழுகையில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கினர்.
இதில் இலங்கை, தஜிகிஸ்தானைச் சேர்ந்த 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து விடுதி மாணவர்களிடம் பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தியது. ஆப்கானிஸ்தான் மற்றும் காம்பியா நாட்டைச் சேர்ந்த குழுவினரும், குஜராத் பல்கலைக்கழக துணை வேந்தரிடம் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் 7 பேர் விடுதியை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குஜராத் பல்கலைக்கழக துணை வேந்தர் நீரஜா குப்தா கூறியதாவது: ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 6 மாணவர்கள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு மாணவரும் படிப்பை முடித்து விட்டு, நிலுவையில் உள்ள நிர்வாக பணிகளுக்காக விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆவணங்களை வழங்கி நாடு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இனி அவர்கள் விடுதியில் முன்னாள் மாணவர்களாக தங்குவதற்கான தேவை இல்லை. அதனால் அவர்கள் விடுதியை காலி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
15 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago