லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பலிடம் சிக்கிய 17 இந்தியர்கள் மீட்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இந்திய இளைஞர்கள் ஆன்லைன் மோசடி உட்பட பல்வேறு சட்ட விரோத வேலைகளில் ஈடுபடுத்தும் போக்கு சமீபமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், லாவோஸ் நாட்டில் மோசடிக் கும்பல்களால் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 17 இந்தியர்களை மீட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “லாவோஸ்நாட்டில் பாதுகாப்பற்ற சூழலில் சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்தப்பட்ட 17 இந்தியர்கள் தற்போது பத்திரமாக இந்தியா திரும்பிக் கொண்டிருக்கின்றனர். உள்நாட்டில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல; வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் மோடியின் உத்தரவாதம் உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

கம்போடியாவில் இந்திய இளைஞர்களை கட்டாயப்படுத்தி நிதி மோசடி வேலைகளில் ஈடுபடுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு பலர் மீட்கப்பட்டுள்ளனர். எனவே, வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE