உத்தர பிரதேசத்தில் மதரஸா கல்வி வாரிய சட்டம் கடந்த 2004-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அங்குள்ள 16,000 மதரஸாக்களில் 17 லட்சம் மாணவர்கள் படித்து வந்தனர்.
இந்நிலையில் உ.பி மதரஸா கல்வி வாரிய சட்டம், மதசார்பின்மை விதிமுறைகளை மீறுவதால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறிஅதை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மதரஸா மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதரஸா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘‘மத கல்வியை, மத போதனையாக கருத முடியாது. மதரஸா கல்வி தரமற்றது, பொதுவானது அல்ல என கூறுவது தவறு. உயர் நீதிமன்ற உத்தரவால், 17 லட்சம் மதரஸா மாணவர்களையும், 10,000ஆசிரியர்களும் பீதியடைந்துள்ளனர்’’ என்றார்.
அதன்பின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: உ.பி மதரஸா கல்வி வாரிய சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது சரியல்ல. மதரஸா வாரியத்தின் நோக்கங்கள் ஒழுங்குமுறையுடன் கூடியது. மதரஸா கல்வி வாரியத்தால் மதச்சார்பின்மைக்கு பாதிப்பு ஏற்படாது. மதராஸாக்களில் பயின்ற 17 லட்சம் பேரை வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
அவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்த உத்தரவாதமும் இல்லை. அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணை ஜூலை 2-ம் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் உத்தர பிரதே சத்தில், மதரஸா கல்வி வாரிய சட்டம் தொடர்ந்து செயல்படும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago