புதுடெல்லி: நிலவும் மோதலுக்கு மத்தியில் இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் 60 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை வேலைக்காக இஸ்ரேல் சென்றுள்ளனர். இந்தியா - இஸ்ரேல் அரசுகளுக்கு இடையிலான உடன்பாட்டின்படி இம்மாதம் இஸ்ரேல் செல்லும் 1,500 இந்தியத் தொழிலாளர்களில் முதல் குழு இதுவாகும்.
இதுகுறித்து டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இஸ்ரேலில் இந்திய கட்டுமானத் தொழிலாளர்களுக்கான தேவை வரும் மாதங்களில் அதிகரிக்க உள்ளது. மேலும் 15,000 தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மற்றும் ஹரியாணாவில் இருந்து கடந்த ஜனவரியில் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அடுத்த கட்டமாக தெலங்கானாவும் மகாராஷ்டிராவும் தங்கள் மாநிலத்தில் ஆட்களை தேர்வுசெய்ய ஆர்வம் காட்டி வருகின்றன” என்றார்.
இஸ்ரேல் தூதர் நவோர் கிலான் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், “இஸ்ரேல் செல்லும் இந்திய கட்டுமானத் தொழிலாளர்களின் முதல் குழுவுக்கு பிரியாவிடை அளித்தோம். இந்தியாவில் தேசிய திறன் மேம்பாட்டு கழகம் போன்றவற்றின் கடின உழைப்பால் இது சாத்தியமானது. இந்திய – இஸ்ரேல் மக்களுக்கு இடையிலான உறவில் இவர்கள் தூதர்களாக மாறுவார்கள் என நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
55 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago