தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான ஸ்ரீரெட்டி, தனக்கு தெலுங்கு திரையுலகில் ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து பகிரங்கமாக போராடி வருகிறார். இந்த விவகாரம் குறித்து விளக் கம் அளிக்கும்படி தெலங்கானா அரசுக்கும், மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறைக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தனக்கு சினிமா வாய்ப்புகள் அளிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, தனது வாழ்க்கையை பாழாக்கியதாக தெலுங்கு திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்களோடு நடிகை ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்து வருகிறார். இதனை வெளிப்படுத்த வேறு வழியின்றி, அரை நிர்வாணமாக போராட்டம் நடத்த வேண்டி வந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவருக்கு நடிகர், நடிகைகள், உஸ்மானியா பல்கலை. மாணவர் சங்கத்தினர், மகளிர் அமைப்பினரின் ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம், இந்த விவகாரம் பற்றி விளக்கம் கேட்டு தெலங்கானா அரசுக்கும், மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறைக்கும் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வராமல் தடுத்து நிறுத்துவதும் தனி மனிதனின் உரிமையை பறிப்பதாகும். எனவே, இதற்கு விளக்கம் அளிக்க வேண்டுமென மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் குழு இன்று ஹைதராபாத் வர உள் ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago