மாநிலங்களின் விருப்பப்படி நீட் தேர்வு; பெண்களுக்கு ரூ.1 லட்சம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், “நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.” போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மக்களவை தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஒரு குழுவை அமைத்திருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்தக் குழு தேர்தல் அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் ஆலோசனை கேட்டது. மேலும் ஆலோசனை கேட்பதற்காக தொடங்கப்பட்ட இணையதளம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பல்வேறு தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கினர். இதன்அடிப்படையில் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தயாரித்தது.

அதன்படி, தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் வைத்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். விழாவில் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக பேசிய ப.சிதம்பரம், “நீதி என்பதை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் யாரெல்லாம் ஒதுக்கப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வழங்கும்வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. work, wealth, welfare என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மக்கள் நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும்.” என்று தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கிப் பேசினார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE