புற்றுநோய் பாதிப்புக்கு கார் டி-செல் சிகிச்சை: குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

மும்பை: புற்றுநோய்க்கு முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கார் டி-செல் நவீன கிகிச்சை முறையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். மும்பை ஐஐடி-யில் இதற்காக நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியது:

புற்றுநோய்க்கான கார் டி-செல் தெரபி முறை மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம். இது, நோய்க்கு எதிரான போரில் புதிய நம்பிக்கையை அளிக்கிறது.

மேலும், மேக் இன் இந்தியா முயற்சிக்கு இந்த சிகிச்சை முறை கண்டுபிடிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஐஐடி மும்பை மற்றும் டாடா மெமோரியல் சென்டரால் உருவாக்கப்பட்ட இந்த மரபணு அடிப்படையிலான சிகிச்சைமுறையானது பல்வேறு வகையான புற்றுநோய்களை குணப்படுத்த உதவும். கார் டி-செல் சிகிச்சை புற்றுநோய்க்கான செலவை கணிசமாக குறைக்க உதவும். புற்றுநோய்க்கு எதிரான போரில் இந்த சிகிச்சை முறை ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு திரவுபதி முர்மு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE