புதுடெல்லி: உபா, பிஎம்எல்ஏ போன்ற கடுமையான சட்டங்களை நீக்க பாடுபடுவோம் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது அதில் கூறியிருப்பதாவது:
உபா (சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம்), பிஎம்எல்ஏ (சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டம்) போன்ற கடுமையான சட்டங்கள் நீக்க பாடுபடுவோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கைவிடவும். வெறுப்புணர்வு பேச்சு மற்றும் குற்றங்களுக்கு எதிராக சட்டம் கொண்டுவரவும் வலியுறுத்துவோம்.
100 நாள் வேலை திட்ட பட்ஜெட் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கவும் நகர்ப்புற வேலைவாய்ப்புக்கு புதிய சட்டம் இயற்றவும் வலியுறுத்தப்படும். பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிக்கவும் பொது சொத்து வரி மற்றும் பரம்பரை வரிக்கான சட்டம் இயற்றப்படும். அரசியலில் இருந்து மதத்தை பிரித்து பார்க்கும் கொள்கையை கடைப்பிடிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago