“இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்” - கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா தனக்கு வயதாகிவிட்டதால், இனி வருகின்ற தேர்தல்களில் போட்டியிடமாட்டேன். தேர்தல் அரசியலில் இருந்து விலகிவிடுவேன் என அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் நேற்று (புதன்கிழமை) பிரச்சாரம் மேற்கொண்ட சித்தராமையா பேசுகையில், “வருணா தொகுதி மக்கள் நான் மீண்டும் அடுத்த‌ சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றன‌ர். ஆனால் இனி வருகின்ற‌ தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என நான் முடிவு செய்துள்ளேன். ஏனென்றால் எனக்கு இப்போது வயது 77. எனக்கு இன்னும் 4 ஆண்டுகள் எனது பதவிக் காலம் இருக்கிற‌து. அப்போது எனக்கு 81 வயது ஆகி இருக்கும்.

82 வயதில் இப்போது இருக்கும் உடல் நலம் இருக்காது. அப்போது என்னால் மகிழ்ச்சியாக வேலை செய்ய முடியாது. முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய முடியாது. எனக்கு 82 வயது ஆகும்போது, அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகி இருக்கும். அப்போது தேர்தல் அரசியலில் இருந்து விலகி விடுவேன்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்