கேஜ்ரிவாலின் 6 வாக்குறுதிகள்: டெல்லி கூட்டத்தில் வாசித்தார் மனைவி சுனிதா

By செய்திப்பிரிவு

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இண்டியா கூட்டணி சார்பில் நேற்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெற்றது.

இதில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா, உத்தவ் தாக்கரே, மெகபூபா முப்தி, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா, தனது கணவர் அமலாக்கத்துறை காவலில் இருந்து வெளியிட்ட தகவலை வாசித்தார். அதில், ‘‘நான் வாக்கு கேட்கவில்லை. தேர்தலில் ஒருவரை தோற்கடிக்க உதவுங்கள் என கேட்கவில்லை. நாட்டை முன்னேற்ற உதவ வேண்டும் என்றுதான் கேட்கிறேன்’’ என கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தார். கேஜ்ரிவால் அளித்துள்ள 6 வாக்குறுதிகளை அவர் வாசித்தார்.

# இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மின் தடை இருக்காது. 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்கப்படும்.

# நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச மின்சாரம்.

# அனைத்து பகுதிகளிலும் அரசு பள்ளிகளை உருவாக்கி, பணக்காரர்களுக்கு கிடைக்கும் தரமான கல்வி ஏழைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்வோம்.

# ஒவ்வொரு கிராமங்களிலும் மருத்துவமனைகளை உருவாக்கு வோம். அனைவருக்கும் முறையான இலவச சிகிச்சை கிடைக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்குவோம்.

# சுவாமிநாதன் அறிக்கைபடி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்போம்.

# டெல்லிக்கு மாநில அந்தஸ்தை வழங்குவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE