பான் அட்டை துஷ்பிரயோகம்: குவாலியர் கல்லூரி மாணவருக்கு ரூ.46 கோடி வரி நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

குவாலியர்: கல்லூரி மாணவனின் பான் அட்டையை துஷ்பிரயோகம் செய்த கம்பெனியில் ரூ.46 கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இதனால் அந்த மாணவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பிரமோத் குமார். அவருக்கு வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டியிலிருந்து வரி நோட்டீஸ் வந்திருந்தது. அதில்ரூ. 46 கோடிக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரமோத் குமார் பான் அட்டை எண்ணில் ஒரு நிறுவனம் மும்பை மற்றும் டெல்லியில் செயல்படுவது தெரியவந்தது.

தனது பான் எண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பிரமோத் குமார் தெரிவித்தார். தனது பான் எண் எப்படி தவறாக பயன்படுத்தப்பட்டது என தெரியவில்லை என பிரமோத் குமார் கூறியுள்ளார்.

தற்போது போலீஸில் பிரமோத்குமார் புகார் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் இவர் கொடுத்த புகாருக்கு போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பின் காவல் துறை ஏஎஸ்பியை சந்தித்து பிரமோத் குமார் புகார் அளித்தார். இதையடுத்து பிரமோத் குமார் பான் எண் தொடர்பான ஆவணங் களை போலீஸார் சரிபார்த்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE