3-வது முறையாக பிரதமராக வாய்ப்பு: மோடியின் பிரபலத்துக்கு காரணம் என்ன? - எகனாமிஸ்ட் அறிக்கையில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி; பிரதமர் நரேந்திர மோடியை சாதாரண வலிமையானவராக கருத முடியாது. அவர் மூன்றாவது முறையாக வென்று பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என எகானமிஸ்ட் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச அரசியல் நிபுணர் களின் கூற்றுப்படி ஆரம்ப கல்விக்கு மேல் படிக்காத 66 சதவீதம் இந்தியர்கள் மோடி மீது தங்களுக்கு மிகவும் சாதகமான பார்வை இருப்பதாக தெரிவித்துள்ளனர். உயர்கல்வி பெற்றவர்களிடையே இந்த எண்ணிக்கை 80 சதவீதமாக உள்ளது. பட்டம் பெற்ற இந்தியர்களில் சுமார் 42 சதவீதம் பேர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை ஆதரிக்கின்றனர். அதேசமயம், ஆரம்ப கல்வி பெற்றவர்களில் இந்த எண்ணிக்கை 35 சதவீதமாக இருந்தது.

2014-19-க்கு இடையில் கிராமப்புற, பின்தங்கிய இனம் மற்றும் இளம் வாக்காளர் மத்தியில் பாஜகவுக்கான செல்வாக்கு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது. குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே பாதி பேர் மோடிக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களில் பாஜகவுக்கான ஆதரவு 34 சதவீதத்திலிருந்து 44 சதவீதமாக அதிகரித்துள்ளது. அனைத்து வாக்காளர்களிடையே இந்த ஆதரவு 31 சதவீதம் முதல் 37.5 சதவீதமாக உள்ளது.

மோடியின் வெற்றிக்கு வர்க்க அரசியல், பொருளாதாரம் மற்றும்உயரடுக்கு பிரிவினரின் அபிமானமே முக்கிய காரணமாக உள்ளது. பாஜக வணிக தோழமையுடன் செயல்படுவதால் பனியா வர்த்தக சமூகம் மோடிக்கு ஆதரவாக இருக்கிறது. இதில், பெருமுதலாளிகளான அம்பானி மற்றும் கவுதம் அதானியும் அடங்குவர். உயரடுக்கு இந்துகள் பாஜக ஆதரவு தளத்தின் முக்கிய ஒரு அங்கமாக உள்ளனர். இந்துத்துவாவை ஆதரிப்பதால் உயர் சாதி குழுக்கள் பாஜக பக்கமே நிற்கிறது. இது, மற்ற குழுக்களையும் பாஜக சென்றடைய உதவுகிறது.

பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால், உயரடுக்கு-நடுத்தர வர்க்கத்தினரின் செல்வம் அதிகரித்து வருகிறது. நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளும் அதற்கேற்றாற்போல் கட்டமைக் கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் பொரு ளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் ஸ்திரத்தன்மை அதிகரித்துள்ளது. எனவே, நம்பகமான மாற்று ஒன்று தோன்றும் வரைபிரதமர் மோடிக்கு கிடைத்துவரும் ஆதரவு தொடரும் என்றுஎகனாமிஸ்ட் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்