காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 5-ம் தேதி வெளியாகிறது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஒரு குழுவை அமைத்திருந்தது. மத்தியில் ஆளும் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 27 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

இந்நிலையில், வரும் 5-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

தேர்தல் அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் ஆலோசனை கேட்டிருந்தோம். இற்காக தொடங்கப்பட்ட இணையதளம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பல்வேறு தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். இதன்அடிப்படையில் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம். இது வரும் 5-ம் தேதி வெளியிடப்படும். இந்த அறிக்கை நாட்டு மக்களின் குரலாக இருக்கும்.

வருமான வரித் துறை மூலம் நோட்டீஸ் அனுப்பி காங்கிரஸ் கட்சியை நிலைகுலைய வைக்கபாஜக முயற்சிக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி பயப்படவோ சோர்வடையவோ போவதில்லை. இந்த சவால்களை எல்லாம் சிறப்பாக சமாளித்து வெற்றி பெறுவோம். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்