காங்கிரஸ் கட்சி ரூ.1,745 கோடிக்கு மேல் வரி செலுத்த கோரி நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரூ.1745 கோடிக்கு மேல் வரி செலுத்த கோரி காங்கிரஸ் கட்சிக்கு, வருமான வரித் துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் செலுத்த வேண்டிய தொகை ரூ.3,567 கோடியாக உயர்ந்துள்ளது.

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த வரி விலக்கு முடிவுக்கு வந்துவிட்டது. இதையடுத்து கடந்த 2017-18 முதல் 2020-21-ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கான வரி நிலுவை ரூ.1,823 கோடி செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

தற்போது 2014-15 ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.663 கோடி, 2015-16-ம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.664 கோடி, 2016-17-ம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை ரூ.417 கோடி என மொத்தம் ரூ.1745 கோடி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித் துறை புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மொத்தத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.3,567 கோடி வரி நிலுவை செலுத்த வேண்டும் வருமான வரித் துறை கூறியுள்ளது. முந்தைய ஆண்டுகளுக்கான வரித் நிலுவைத் தொகையாக ரூ.135 கோடியை காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கெனவே எடுத்து விட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE