ஆந்திரா தலைநகர் அமராவதியில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. 5 கோடி மக்களின் நலனை மத்திய அரசு புறக்கணிக்கிறது. வாக்கு தவறிய பிரதமர் மோடி குறித்து நாடறியும் வகையில் ஆந்திரா போராட்டம் நடத்தியுள்ளது. இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் 3 முக்கிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை.
ஆந்திராவில் பாஜக தனது கட்சியை பலப்படுத்தி கொள்ளவே, நிதி வழங்காமல் ஆளும் கட்சிக்கு அவப்பெயர் வரும்படி நடக்கிறது. நிதி வழங்கி, அதுகுறித்து நான் தப்பான கணக்குக் காட்டுவதாக பாஜக கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறது. மோடி எனக்கு அரசியலில் ஜூனியர். ஆனாலும், அவர் பிரதமர் என்பதால், சார்...சார்... என அழைத்தேன். அந்த மரியாதையை அவர் காப்பாற்றிக் கொள்ளவில்லை. அவருடைய குணம் வெளிப்பட்டது. அதனால்தான் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினோம். இவ்வாறு சந்திரபாபு கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago