ஜூன் 1-ம் தேதி வரை தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதோடு ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்பட உள்ளது.

மேலும் தமிழ்நாடு, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படஉள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி 21 மாநிலங்களை சேர்ந்த 102 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இறுதிக் கட்டமாக ஜூன் 1-ம் தேதி 8 மாநிலங்களை சேர்ந்த 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த சூழலில் ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்