மக்களவை எம்.பி.க்கள் 225 பேர் மீது குற்ற வழக்குகள்: வேட்பு மனுவில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு தற்போதைய மக்களவை எம்.பி.க்களின் வேட்பு மனுக்களை ஆய்வு செய்ததில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் விவரம்:

தற்போதைய மக்களவை எம்.பி.க்கள் 514 பேரில் 225 பேர்மீது குற்ற வழக்குகள் உள்ளன. இது 44 சதவீதம் ஆகும். இவர்களில் 29 % பேர் மீது கொலை,கொலை முயற்சி, இனக் கலவரத்தை தூண்டியது, கடத்தல் என கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் 9 பேர் மீது கொலை குற்றச்சாட்டுகள் உள்ளன.

குற்ற வழக்குகள் உள்ள எம்.பி.க்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் உ.பி., மகாராஷ்டிரா, பிஹார்,ஆந்திரா, தெலங்கானா, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். எம்.பி.க்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.சிலர் பல நூறு கோடி சொத்து மதிப்புடையவர்களாக உள்ளனர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகுல்நாத், டி.கே.சுரேஷ், சுயேட்ச்சை எம்.பி. கானுமுரு ரகு ராம கிருஷ்ணராஜு ஆகியோருக்கு பல நூறு கோடி சொத்துகள் உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE