மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய பட்ஜெட் குறித்து தனது கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது, ஆந்திர மாநிலம் பயனடையும் வகையிலான திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என அனைவரும் கருத்து தெரிவித்தனர்.
குறிப்பாக போலாவரம் அணைக்கட்டு, அமராவதி தலைநகருக்கான சிறப்பு நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என அவர்கள் தெரிவித்தனர். மேலும், மாநில பிரிவினை மசோதாவின்படி, ஆந்திராவுக்கு சிறப்பு நிதியும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்தார். அப்போது அவர், “ஆந்திர மாநில உரிமைக்காக இறுதி வரை போராடுவோம். இது குறித்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்போம்” என தெரிவித்தார்.
தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும், அமைச்சர் சுஜனா சவுத்ரியும் டெல்லியிலிருந்து சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago