லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தார் அன்சாரி காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக அவர் பணியாற்றி உள்ளார்.
அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் காரணமாக பாண்டா சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வந்தார். 63 வயதான அவர் கடந்த 26-ம் தேதி அதிகாலை வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்த தகவல் அவரது குடும்பத்தினர் வசம் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் அவருக்கு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அவரது குடும்பத்தினர் முன்வைத்தனர். இருந்தும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.
» ‘தோனிக்கு வயதாகிறது’ - சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் செயல்பாடு குறித்து சேவாக்
» திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா உடன் தகராறு: முன்னாள் வேட்பாளர் கட்சிப் பதவி பறிப்பு
வியாழக்கிழமை இரவு 8.25 மணி அளவில் பாண்டாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிறையில் இருந்த முக்தார் அன்சாரி கொண்டு வரப்பட்டார். அவரை சிறைச்சாலை ஊழியர்கள் அழைத்து வந்தனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். நோயாளிக்கு 9 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்தும் நோயாளி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago